அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: வர்ஜீனியா வால்மார்ட் கடையில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர், 10 பேரை கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடையின் மேலாளர் என்று நம்பப்படும் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார். உள்ளூர் நேரப்படி 22:12 மணிக்கு (03:12 GMT) இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது. சென்டாரா நோர்போக் பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் அங்கு ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார்.