சென்னை போரூர் அருகே ஒரு கும்பல் காரில் சிலை கடத்தி்செல்வதாக ஐஜி பொன்.மாணிக்கவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார்முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை மடக்கி் சோதனையிட்டபோது, தாலிக்கொடியுடன் கூடிய ஒன்றே முக்கால் அடி உயர ஐம்பொன்சிலை இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கோபி, கணேஷ், யுவநாதன், சக்திவேல் என தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் திருவள்ளூர் அருகே கோயிலில் வழிபாட்டில் இருந்த சிலையை திருடி 50 லட்சத்துக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது. எந்த கோயிலில் திருடிய சிலை? இவர்களின் பின்னணி என்ன? போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலைகடத்தல் கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவிய 3 ஆட்டோ டிரைவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது யாராக இருந்தாலும் இந்து கோவில் சிலைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி – பொன்மானிக்கவேல் அய்யா அவர்களுக்கு.