இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

லண்டன்: சமூக ஊடக வீடியோவை படம்பிடிக்கும் போது ஓடும் காரில் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து காவல்துறை. சுனக்கின் பெயர் குறிப்பிடாமல்,  “லங்காஷயரில் ஓடும் காரில் பயணி ஒருவர் சீட் பெல்ட் அணியத் தவறியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை, ஜன. 20) லண்டனைச் சேர்ந்த 42 வயது நபருக்கு அபராதம் விதித்துள்ளோம் ” என்று லங்காஷயர் காவல்துறை ட்வீட் செய்தது. 

இந்த அறிவிப்புக்குப் பிறகு, சுனக்கின் அலுவலகம், “பிரதமர் இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்கு இணங்குவார்”, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருக்கும்போது சுனக், அபராத அறிவிப்பைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். 

Categories: Britain, Prime Minister, RishiSunak, UK
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *