மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 16:20 மணிக்கு (13:20 GMT) தக்சிம் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் கூறினார்.
நீதி அமைச்சர் Bekir Bozdag துருக்கிய ஊடகத்திடம் கூறுகையில், குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பெஞ்சில் 40 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்தார், என்று கூறினார். திங்கள்கிழமை காலை, உள்துறை மந்திரி சுலைமான் சோய்லு, வெடிகுண்டை விட்டுச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார், மேலும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.