உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் தலைநகர் கிவ்பைஇன்னும் கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யாவின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம். உக்ரைன் ராணுவம் மட்டுமல்லாது பொதுமக்களும் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கின்றது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Categories:
Uncategorized