உண்மையான ஏழைப் பங்காளன் காமராஜர்

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார்.
அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது.
குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் – அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு – பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.
அங்கிருந்த காவலரை பார்த்து –
இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கு என்னான்னே?.. – என்று சத்தம் போட்டுவிட்டு,
ஒதுங்கி நின்ற மக்களை பார்த்து,
இப்படி ஒதுங்கி நின்னா எப்படின்னேன்?.. வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்!.. – என அன்புடன் அழைத்தார்.
உண்மையான ஏழைப் பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆரவாரத்துடன் அருவியில் குளித்தனர்…
அன்று குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்ததாம்!..
அதற்கு முன்னும் பின்னும் எந்த முதல்வரும் மக்களுடன் சேர்ந்து குளித்ததாக வரலாறு இல்லை!..
Categories: Kamarajarar, Real Leader, Tamil Nadu, இசை, இயல், நாடகம்
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *