🍇 நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று.
🍇 உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது உலர் திராட்சை……
▶கருப்பு,
▶பச்சை,
▶கோல்டன்
👉மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன.
நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.
இவற்றில்………
➡வைட்டமின் பி, சி,
➡ஃபோலிக் ஆசிட்,
➡இரும்புச்சத்து,
➡கரோட்டீன்கள்,
➡லுடீன்,
➡பொட்டாசியம்,
➡கால்சியம் மற்றும் மக்னீசியம்
போன்ற சத்துக்கள் உள்ளன.
பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
👉 பலவகை திராட்சை உள்ளது அவைகள்………
🍇கறுப்பு திராட்சை,
🍇பச்சை திராட்சை,
🍇பன்னீர் திராட்சை,
🍇காஷ்மீர் திராட்சை,
🍇ஆங்கூர் திராட்சை,
🍇காபூல் திராட்சை,
🍇விதையில்லா திராட்சை
என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
உலர்திராட்சையின் தயாரிப்பும்அதன் பயன்களும்❓❗
🍇 நமது வீட்டிலேயே தயாரிக்கலாம் உலர் திராட்சை
❓ உலர் திராட்சை செய்முறை❓
▶திராட்சை – 1கிலோ
▶நெய் (அ) எண்ணை – 4 சொட்டு
நல்ல இனிப்பான திராட்சையை சிறிது உப்பு மஞ்சள் (அ) வினிகர் சேர்த்து 4 – 5 முறை சுத்தம் செய்யவும்.
திராட்சை முழ்கும் அளவு தண்ணீர் எடுத்து அதில் சிறிது நெய் விட்டு வேக வைக்கவும், திராட்சையின் தோலில் சுருக்கம் வந்ததும் இறக்கி 5 நிமிடம் ஒரு தட்டைக் கொண்டு மூடி விடவும்.
பிறகு திராட்சை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் 5 – 6 நாள் பரப்பி காயவிடவும்.
நல்ல சுவயான உலர் திராட்சை தயார். ஒரு கிலோ திராட்சைக்கு கால் கிலோ உலர் திராட்சை கிடைக்கும்.
🇨🇭 உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்
72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
♦இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
💊ரத்தசோகையை கட்டுப்படுத்தும்💊
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
💊காமாலை நோய் குணமடையும்💊
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
💊உடல் புஷ்டிக்கு💊
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
💊தொண்டைக்கம்மல் இருந்தால்💊
இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.
💊மூலநோய்உள்ளவர்கள்💊
தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
💊குழந்தைகள் வளர்ச்சிக்கு💊
வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது
இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
💊இரத்த விருத்திக்கு💊
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
💊உடல் வலி குணமாக💊
பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
💊கர்ப்பிணிப் பெண்களுக்கு💊
கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
💊மாதவிலக்குக் காலங்களில்💊
மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
💊மலச்சிக்கல் தீர💊
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.
தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.
💊குடல்புண் ஆற💊
அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
💊இதயத் துடிப்பு சீராக
சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
💊சுகமான நித்திரைக்கு💊
தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
🔴 உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு…❗❗
சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது
உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது (வெளி மார்கெட்டில்) ரசாயன அமிலங்கள் கொண்டு தான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு
அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்
🇨🇭 எளிமையான இந்த உணவுப் பழக்கத்தை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.