எங்கே செல்கின்றோம்…
வன்முறைக்கும் குண்டுகளுக்கும் மத்தியில் இன்றைய மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த மனித வாழ்க்கையில் மனிதம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான். ராஜஸ்தானின் கரௌலியில் வகுப்புவாத வன்முறையால் தீப்பிடித்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு குழந்தையை காப்பாற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சனிக்கிழமையன்று அங்கு மத வன்முறை வெடித்தது. இந்து புத்தாண்டான சம்வத்சரையொட்டி, முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்ற பொழுது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தீக்குளிப்பிற்கு வழிவகுத்தது. அரசியல்வாதிகள் இந்த வன்முறையை எதிர்த்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்தக் குரல்கள் எந்த செவிகளை சென்றடைய போகின்றது.
மத ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தையடுத்து ராஜஸ்தான் காவல்துறையால் நாற்பத்தி ஆறு பேர் கைது செய்யப்பட்டு ஏழு பேர் விசாரணைக்காக சனிக்கிழமை காவலில் வைக்கப்பட்டனர். அம்மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 144 விதிக்கப்பட்டது மற்றும் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. இழந்த உறவுகளுக்கு நாம் என்ன பதில் சொல்ல போகின்றோம். எதிர்கால சந்ததிகளுக்கு எந்த பாதையை நாம் விட்டுச் செல்லப் போகின்றோம்???