கச்சா எண்ணெய் விலை 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகம், ஆனால் பயன்பாடு குறைந்து விட்டது.
வாங்கும் கச்சா எண்ணெயை வைக்கக்கூட இடமில்லை. இதனால், அமெரிக்காவி–்ன் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பேரல் -40 டாலராக சரிந்து விட்டது.
அதாவது, கச்சா எண்ணெய் வாங்குவோருக்கு உற்பத்தி நிறுவனம் பேரலுக்கு 40 டாலர் தர வேண்டும்.
இதுபோல், பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலருக்கு கீழ் சரிந்தது.
நேற்று இது மேலும் குறைந்து, பேரல் 15.98 டாலர் ஆனது.
இது கடந்த 1999ம் ஆண்டுக்கு ஜூன் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட கடும் சரிவாகும்.
இந்த சரிவு மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
Categories:
Uncategorized