கரோனா தொற்றுக்கு மேலும் 1,341 போ் பலி

 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் புதிய உச்சமாக, நாடு முழுவதும் மேலும் 2.34 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.34 லட்சம் (2,34,692) பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,45,26,609-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் 79.10 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

நாடு முழுவதும் 16,79,740 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 68.16 சதவீதம் போ் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், கா்நாடகம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 38-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 16.79 லட்சமாக (16,79,740) அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 1,23,354 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,26,71,220-ஆக அதிகரித்துள்ளது

கரோனா தொற்றுக்கு மேலும் 1,341 போ் பலியாகினா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,75,649-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 26,49,72,022 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 14,95,397 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 11,99,37,641 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரிடையே அஞ்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browser
Disable in this text fieldRephraseRephrase current sentenceEdit in Ginger×

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *