திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று
மாலை 4.15 மணி அளவில் சென்னை, காவேரி
மருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்தித்த
பின்னர் காங்., தலைவர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில்; தி.மு.க., தலைவர்
கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும்,
அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரை சந்தித்து
உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல்
அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம்
மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததை
தெரிவித்தேன். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
திமுக தலைவவரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால்,
முதல்வர் பழனிசாமி , அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட
பலர் நலம் விசாரித்து வருகின்றனர்.