குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்!
சென்னை: மூத்த பத்திரிகையாளரான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.