கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு!:

 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு!: மராட்டிய அரசு அதிரடி..!!

மராட்டியத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 கொரோனாவால் உச்சகட்ட பாதிப்பை அடைந்த மராட்டிய மாநிலம் அதிலிருந்து மீண்டு வருகிறது. 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அம்மாநில அரசு ஏற்கனவே உதவித்தொகையை அறிவித்தது. 

இந்த நிலையில் கொரோனாவால் தனித்து விடப்பட்ட குழந்தைகளை 3 வகையாக பிரித்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சயோமதி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்து வீடில்லாமல், உறவினர்கள் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. 

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *