சியாச்சின் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி

சியாச்சின் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1984-ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதும், பனிசூழ்ந்த ராணுவத் தளமுமான சியாச்சின் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பிலஃப்ண்ட் லா (Bilafond La ) கணவாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் மெக்தூத் (Meghdoot) என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து மீட்டது.

அப்போது முதல் கடினமான புவியியல், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கிடையே இந்தப் பகுதிகளை இந்திய வீரர்கள் தீரத்துடன் காத்து வருகின்றனர்.

 இந்நிலையில் வீரத்துடன் போரிட்டு சியாச்சின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 36-ஆவது ஆண்டு சியாச்சின் தினத்தை முன்னிட்டு, ராணுவத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *