கவலை அளிக்கும் வகையில் மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிடுகிடுவென உயந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா வயதானவர்களுக்கே பாதிக்கும், இளம் வயதினரை பெரிதாக பாதிக்காது, அது சாதாரண காய்ச்சல் போல் வந்து செல்லும், ஒபாசிட்டிவ் இருந்தால் எதுவும் செய்யாது என எல்லா வதந்திகளை நம்பிய மக்கள் வெகு இயல்பாக கொரோனாவை கடக்க தொடங்கினார்கள். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கொரோனா.. என்று அச்சத்துடன் பார்த்தவர்கள். கொரோனாதானே என்று சாதாரணமாக அதோடு வாழ பழகிக்கொண்டார்கள். இதன் விளைவு ஆரம்பத்தில் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அதன்பிறகான நிலைமை மோசமாகி கொண்டே வந்தது.
தமிழகத்தில் 41% கொரோனா கேஸ்களுக்கு காரணம் ‘ஏ3ஐ’ வைரஸ்.. சீனாவிலிருந்து வரவில்லை.. ஆய்வில் பரபர தகவல்
அலட்சியங்கள் மாறியதுதினமும் 10 பேருக்கு ஏற்பட்ட போது இருந்த பதற்றம் 100 பேருக்கு வந்த போது இல்லை. ஆனால் 1000 ஆக மாறிய போது மக்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள்
2 பேர் இறந்த போது சாதாரணமாக இருந்த மக்கள் தினமும் 30 பேருக்கு மேல் இறக்க ஆரம்பித்த போது அச்சப்பட ஆரம்பித்தார்கள். ஆம் மக்கள் இப்போது தான் கொரோனாவின் வீரியத்தை புரிந்து விழிப்புடன் செயல்பட ஆரம்பித்து உள்ளார்கள்.
ஒரு மாதத்தில் உயர்வுஆனால் துரதிஷ்டவசமாக பலருக்கும் அவர்களுக்கு தெரியமாலேயே புகுந்து விட்டது. எத்தனை பேருக்கு கொரோனா இதுவரை பரவி இருக்கிறது என்பதை சோதிக்க சோதிக்க தான் உண்மை தெரிந்து வருகிறது
உண்மையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா 38 ஆயிரம் பேருக்கு பரவி உள்ளது. ஆம் கடந்த மே 11ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 8,002 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருந்தது.
ஆனால் ஜூன் 15ம் தேதி மாலை நிலவரப்படி 46,504 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் 53 ஆக இருந்த நிலையில் இன்று 479 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 44 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.
சமூக இடைவெளி இல்லைதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கொரோனா கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
கோயம்பேடு, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணத்தால் இங்கு கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் இங்கு தான் மிக அதிகமாக உள்ளது.கடுமையான உயர்வுஇந்நிலையில் சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து சென்றவர்களால் மதுரை, திருவண்ணாமலை வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருநெல்வேலி, தூததுக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 560 பேருக்கும், மதுரையில் 442 பேருக்கும், ராணிப்பேட்டையில் 234 பேருக்கும், திருவண்ணாமலையில் 701 பேருக்கும், தூத்துக்குடியில் 436 பேருக்கும், திருநெல்வேலியில் 489 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில்மேலே சொன்ன மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருநெல்வேலி, தூததுக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவல் சென்னையில் அதிகரிக்கும் முன் மற்ற மாவட்டங்களை போல் இயல்பான அளவிலேயே இருந்தது. ஆனால் இப்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த 7 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூரில் 103 பேரும், மதுரையில் 141 பேரும், ராணிப்பேட்டையில் 120 பேரும், திருவண்ணாமலையில 252 பேரும், திருநெல்வேலியில் 112 பேரும், தூத்துக்குடியில் 132 பேரும், வேலூரில் 114 பேரும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள்
மக்கள் எதிர்பார்ப்பு உயிரிழப்பும் தற்போது இங்கு கணிமாசமாக உயர்ந்துள்ளது.எனவே இந்த மாவட்டங்களில் உடனடியாக கொரோனா பாதிப்பை குறைக்க பரிசோதனையை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதும், வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும் என்பது அந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Categories:
Uncategorized