டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வு

டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லியில் நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.

அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.

வடகிழக்கு டெல்லியில் வசிராபாத் பகுதியில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

கொரோனா வைரசுக்காக வீடுகளில் முடங்கி இருந்த மக்கள், பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர்.

டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

 இன்று மதியம் 1.26 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *