டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களை நோயாளிகள் தாக்கியதை அடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளிகள் பலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அப்போது அவரை மீட்க வந்த ஆண் மருத்துவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவர்கள் அனைவரும் தங்கள் அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்புத் தேடிக்கொண்டனர்.
இதையடுத்து மருத்துவமனையின் இயக்குநருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தங்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
Categories:
Uncategorized