கொரோனா வைரஸை கண்டறியும் பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கி டாடா குழுமம் உதவி செய்துள்ளது.
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்க தேவையான கருவிகளையும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் டாடா குழுமம் சார்பில் கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை டாடா குழுமம் வழங்கியுள்ளது.
இந்த உதவிக்காக டாடா குழுமத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
Categories:
Uncategorized