தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் எதற்கெல்லாம் அனுமதி இல்லை !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து  உத்தரவிட்டுள்ளார். 

எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

  1. மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
  2. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர , சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை
  3. திரையரங்குகள்
  4. அனைத்து மதுக்கூடங்கள்
  5. நீச்சல் குளங்கள்
  6. பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  7. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள்
  8. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  9. உயிரியல் பூங்காக்கள்
  10. திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
  11. இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி 

 தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளை்:

  1. உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  2. தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
  3. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
  4. கேளிக்கை விடுதிகளில் (clubs), உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  5. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
  6. அருங்காட்சியங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 
  7. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்ட அனுமதிக்கப்படும்.
  8. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  9. அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
  10. அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்டும்.
  11. வணிக வளாகங்கள், காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
  12. மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  13. பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் (Entertainment, Amusement parks) 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். முகக் கவசம் அணிதல் கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை.


Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *