தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.திரு. சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்
தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி திரு. சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின், காவலனாக, பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் வகையில், தேசத்தின் நான்காவது தூணின் அரணாக தாங்கள் விளங்க வேண்டும் என்று, இந்த நன்னாளில் தங்களை வாழ்த்தி தங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்
பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தில் சொற்ப ஊதியத்தில் 100 சதவீத தியாகத்துடன் பணியாற்றி வருகிறார்கள் அவர்களை பாதுகாத்திட தங்களைப் போல் நேர்மையான அதிகாரி தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டது மிகப் பெருமையான ஒரு கௌரவமான விஷயமாக நாங்கள் பத்திரிக்கையாளர்கள் கருதுகிறோம், தங்களைப் போல் நல்லவர்கள், தங்களைப் போல் நேர்மையானவர்கள், பத்திரிக்கையாளர்களின் சுதந்தரத்தை அவர்கள் பாதுகாப்பையும், உறுதிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு முறை தங்களஉக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்