நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி சந்தோஷப்பட வேண்டிய விடயங்கள்:
1. மூப்பனார் காலத்தில் இருந்து பதவிகளும், மரியாதையும் அனுபவித்து வந்து, அவருக்குப் பின் அவருடைய மகன் என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அமைச்சர் ஆகி, காங்கிரஸ் இயக்கத்தினால் அத்தனை சலுகைகளையும் பெற்று பின் பாஜகவுக்கு ஆதரவான நிலையை எடுத்து, தனக்கு மட்டும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்கி, தான் வந்த விவசாயப் பாரம்பரியத்தை மறந்து விவசாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து முழு சங்கியாக மாறிய வாசனின் தமாகாவின் அழிவு.
2. புதிய தமிழகம் என்று கூறி தான் சார்ந்த மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்து வந்த சங்கி கிருஷ்ணசாமியின் அழிவு.
3. விஜயகாந்த் என்னும் நல்ல மனிதர் தொடங்கிய கட்சி, கட்டமைப்பு இருந்தும், அவரின் மனைவி, மகன் மற்றும் மைத்துனர் கையில் சிக்கி, பெட்டி மட்டுமே குறிக்கோள் ஆன தேமுதிக வின் அழிவு.
4. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சி என்றிருக்கும் குஷ்பூ மற்றும் மாபா. பாண்டிய ராஜனின் தோல்விகள்.
5.அரசியல் நாகரிகம் தெரியாமல் பேசும் ஹெச். ராஜா, ராஜேந்திர பாலாஜி, சி.வி.சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் தோல்விகள்.
6. ஏராளமான கனவுடன் தராளமான வருவாயுடன் பத்துசதவிகித இட ஒதுக்கீடு நாடகத்துடன் அதிக தொகுதிகளில் களம் இறங்கி வைகோ திருமா அளவிற்கு தான் வெற்றி பெறமுடிந்தது.
7.சீமான் கமலஹாசன் போன்றவர்களின் அதீத கற்பனைக்கு வேகத்தடை போட்டது அவர்கள் மனதில் தொய்வை நிச்சயமாக ஏற்படுத்தும்.
8.திமுக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சி இஸ்லாமியர் அதிகம் உள்ள பகுதிகளிலேயே தோல்வி அடைந்தது வேதனையானது.
9.காங்கிரஸ் கட்சிக்கு அளவாக தொகுதிகள் இருந்ததால் முக்கிய நபர்கள் போட்டியிட்டு அவர்களும் அக்கறை எடுத்து நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
10.காவிகள் தங்கள் கணக்கை தமிழக சட்டசபையில் தொடங்குவதுதான் வேதனை படர்தாமரையாக பரவாமல் தடுப்பது அவசியம். அதிமுக எம்எல்ஏ கூட்டம் ஒன்று தங்களை காத்துகொள்ள காவி கட்டி சென்றாலும் ஆச்சரியம் இல்லை. எடப்பாடியும் எதுவும் செய்ய முடியாமல் கைகல் கட்டபடும்.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் திமுகவிற்க்கு நல்ல ஆதரவினை தந்துள்ளார்கள் எட்டுவழிகசாலை அநியாயம் மறந்த சேலம் பகுதி மக்கள் பொள்ளாச்சி அநியாயம் மறந்த கோவை பகுதி மக்கள் பின்னலாடை மற்றும் சிறு குறு தொழில்களை நலிவடைய செய்த திருப்பூர் மக்கள் இவர்கள் எல்லாம் எப்படி தங்கள் பாதிப்பை சாதாரணமாக எடுத்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
நன்றி தமிழகம்.
Categories:
Uncategorized