✍🏼திருவாரூர் மாவட்டம் சரபோஜிராஜபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
✍🏼கோவை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தின் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
✍🏼சென்னை மண்ணடியில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்
✍🏼செங்கல்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதித்த 16 வயது பீஷ்மர் என்ற வெள்ளைப்புலி உயிரிழப்பு
✍🏼மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
✍🏼திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். துணி துவைக்கும் போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்றபோது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கினர். குளத்தில் மூழ்கி சுமதி(38), அஸ்திதா(14), ஜீவிதா(14), சுகந்தி(38), ஜோதி ஆகியோர் உயிரிழந்தனர்.
✍🏼நாமக்கல் திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார்.
✍🏼பெரம்பலூரில் எஸ்பி உத்தரவின் பேரில் போக்சோவில் கைதானவர் உள்பட 3 பேர் மீது குண்டடி சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குருக்கன்குடியை சேர்ந்த போக்சோ குற்றவாளி பிரேம்நாத், கீழபெரம்பலூர் ரமேஷ், முத்துக்குமார் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது
✍🏼கோவை: ஆந்த்ராக்ஸ் நோயால் 14 வயது யானை இறந்த நிலையில் வன விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆலமரமேடு, பெரியஜம்புகண்டி, சின்னஜம்புகண்டியிலுள்ள ஆடு, மாடுகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
✍🏼புதுக்கோட்டை: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு சித்தப்பா முறையிலான கார்த்திக்கு தண்டனை அளித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது