நிதியுதவிப் பட்டியலில் ஏழைகள் பலர் விடுபட்டுள்ளனர்


சுய தொழில் தொழிலாளர்கள், டாக்ஸி ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாட்கள், தெருவோர வியாபாரிகள், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு நிதியுதவி சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர் என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ள பிரதான் மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜ் என்னும் ஏழைகளுக்கான நிதியுதவித் திட்டத்தைக் குறிப்பிட்டு, இந்த அட்டவணையின்படி ஏழைகள் பலருக்கும் உதவி சென்றடையவில்லை எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சரும், ராஜ்ய சபா எம்.பியுமான ப.சிதம்பரம்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜ் திட்டத்துக்கு அடியில் 32 கோடி ஏழை மக்களுக்கும் மேலானவர்கள், 29,352 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதில் நிதியுதவி வழங்கப்பட்டவர்களின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

அதை ட்வீட் செய்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “நிலமற்ற விவசாயக் கூலி தொழிலாளர்கள், வாடகை தரும் விவசாயிகள், விவசாயத்தொழில் சாரா தினக்கூலி தொழிலாளர்கள், வேலை அற்ற நூறு நாள் திட்ட வேலையாட்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுய தொழில் தொழிலாளர்கள், டாக்ஸி ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாட்கள், தெருவோர வியாபாரிகள், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு நிதியுதவி சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரீமானிடைசேஷன் (Remonetisation) அதாவது பணத்தை மக்கள் கைகளில் இருக்கவைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்

ப.சிதம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *