கேப்ரியல் சூறாவளிக்குப் பிறகு, நியூசிலாந்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், திடீரென அதிர்வு மற்றும் கட்டிடங்கள் நடுங்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நாட்டின் இரண்டு முக்கிய தீவுகளுக்கு இடையே உள்ள குக் ஜலசந்தியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. ஆனால் 10-20 வினாடிகள் நிலம் அதிர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். வடக்குத்தீவு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய பேரழிவு சூறாவளியில் இருந்து தூய்மைப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்டது.