நேரடியாக களத்தில் இறங்கிய கேரள அமைச்சர்

மழை , வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பல பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரயாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அம்மாநில நிதி அமைக்கர் ஜோசப் வயநாடு பகுதியில் தீவிரமாக வெள்ள நிவாரண பணிகளை செய்து வருகிறார். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுத் தெரிவித்து  வருகின்றனர். கேரள நிதியமைச்சர் ஜோசப், பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து நேரடியாக களத்தில் குதித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள பொது மக்களை படகு மற்றும் ஜீப்பில் சென்று மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
வயநாடு அருகே கடுமையான மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் ஜோசப், அங்கிருந்த குழந்தை ஒன்றை கொஞ்சி மகிழ்ந்தார்.
வெள்ள நிவாரணப் பணிகள் என்பது, ஒரு அலுவலக அறையில் உட்கார்ந்து கொண்டு, உததரவிடுவது மட்டுமல்ல, அமைச்சர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றுவது என்பது கேரளாவில் சகஜம். ஆனால் இது போன்று தமிழகத்தில் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *