வேண்டும் என சென்னை வந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை
மனு அளித்தார்.
முதல்வர் அறிக்கை: காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.
கோர்ட் உத்தரவை 6 வாரத்திற்குள் அமல்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என
உத்தரவில் கூறியுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்ற உத்தரவையும் இறுதி
தீர்ப்பில் இணைத்துள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது,
உத்தரவில் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது.
காவிரி தண்ணீரை
நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், ஜூன் 1க்குள் விவசாய பணிகளை
துவங்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற
நம்பிக்கையில் உள்ளனர். உரிய அதிகாரத்துடன், சுப்ரீம் கோர்ட் மற்றும்
நடுவர் மன்றத்தின் அதிகாரத்துடன், காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று
வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.