முப்பத்தொன்பது ஆண்டுகளே நிகழ்ந்த மிகக் குறுகிய வாழ்க்கை பாரதியாருடையது. அவ்வாழ்வும் தனிமனித நிலையிலும் குடும்ப நிலையிலும் சமுதாய நிலையிலும் போராட்டமயமானது.
பொருளாதாரத்திற்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து சொந்த வாழ்வில் போராட்டம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தனது எண்ணங்களை இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் உள்ள சமுதாயப்பிரச்சனைகள், சாதி, சமய வேற்றுமைகளுக்கு எதிர்ப்பு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு, தேசிய மறுமலர்ச்சி, தாய்மொழி வளர்ச்சி என்னும் பன்னோக்குகளில் அவர்தம் உயர்ந்த சிந்தனைகளே பாரதியாரின் படைப்புகள்.
அவர்தம் படைப்புகள் எளிய வடிவில் காணப்பட்டாலும் அவ்வெளிமை உயர்ந்த கலையாக்கத் திறனின் வெளிப்பாடாகும். அவரின் படைப்புகள் ஆழ்ந்த உணர்விலிருந்து படைப்பாக உள்ளதால். கற்போர் நெஞ்சில் பாய்ந்து தாக்கும் ஆற்றலுடையவையாக பாரதியின் படைப்புகள் அனைத்தும்.
தேச பக்திப் பாடல்கள்,
தெய்வ பக்தி பாடல்கள்,
முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு
பாரதியாரின் பாடல்களில் இந்த மூன்று பாடல்கள் முப்பெரும் பாடல்கள் என போற்றப்படும்.
தோழன், தந்தை, தாய், சற் குரு, ஆண்டான், சீடன், சேவகன், காதலன், காதலி, குழந்தை, தெய்வம் எனப் பல்வேறு நிலைகளில் வைத்துக் கண்ணனைப் பாரதியார் பாடியுள்ளார்.
மகாபாரதத்தின் .ஒரு கூறாக அமையும் கதைப் பகுதியைப் பாஞ்சாலி சபதமாகப். பாரதியார் பாடியுள்ளார். பாண்டவர்களின் தவறான முடிவுகளால் மானபங்கப்படும் பாஞ்சாலியும் அவளது சபதமும் பாண்டவர் உணர்வுறுதலும் நமது நாட்டிற்கு மக்களுக்கும் சிறந்த குறியீடாக அமைந்தது என்பதை உணர்வோம். ஆழ்வார்களின் அருளிச் செயல் களில் தாக்கம் இருந்த போதிலும் விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய அளவில் மிகப் பெரிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்து.
‘ ஆன்ற தமிழ்ப்புலவீர் கற்பனையே யானாலும்
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ ‘
என்று பாரதியார் குயில் பாட்டை முடித்துள்ளார்.
பாரதி இல்லாத படைப்புகள் ஏது?
பாரதி இல்லாத இன உணர்வு தான் ஏது?
பாரதி இல்லாத
பெண்ணியம் ஏது?
பெண் விடுதலைதான்
ஏது?
பாரதி இல்லாத கலையும் இலக்கியமும் கற்பனையும்
கதையும் பாட்டும் கூத்தும் ஏது?
எல்லாம் பாரதி தந்தவையே!
இந்த விண்ணும், மண்ணும் உள்ளவரை நின்புகழ் நினைவுகள்
வாழும் மக்கள் மனதில்,
வாழ்க! பாரதியார் புகழ்!