தஞ்சாவூரில இறந்தவர் கொரோனவால் இறந்தார் என்று தெரியாமல் கட்டிப்பிடித்து அழுதனர் உறவினர்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இறந்தவர் மனைவி மகன் மீது போலீசார் வழக்கு.
தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பட்டாகத்தியுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யை தாக்கி விட்டு தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மீதம் உள்ள 2 ரவுடிகள் அஜீத், அஜய் ஆகியோரை போலீசார் தொடந்து தேடுவருகின்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் 81 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு தடுப்பூசி போடப்பட்டது
சேலம் வாழப்பாடி, கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் கடத்திய 8 பேர் கைது
விழுப்புரம்உளுந்தூர்பேட்டையில் இன்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களில் தடுப்பூசி போட்டவர்களின் வாகனங்களை அபாராதமின்றி போலீசார் திருப்பித்தரவே, 15க்கும் மேற்பட்டோர் உடனே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்து தங்களது வாகனத்தை பெற்றுச்சென்றனர்
தூத்துக்குடியில் விபத்தில் காலமான காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி. போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது
தூத்துக்குடி வல்லநாட்டில் திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு வழங்கினார்
கோவை பொள்ளாச்சி: கொரோனா பரவலால் தடை செய்யப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டது மாக்கினாம்பட்டி கிராமம்
விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்ற கோரிக்கை
திருச்சிஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம்.
நாகை சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ₹1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு – போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் -அரசு தலைமை மருத்துவமனையில் 5 பெண்கள் உட்பட 11 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு நிலம், நீர், காற்று நஞ்சாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி ஊடகங்கள் வாயிலாக, ஊர் மக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது.