மாவட்ட செய்தி | ஏப் 14 -2021 | பிலவ | சித்திரை 1 –

 பிலவ | சித்திரை 1 – இரவு 9 மணிவரை பல்வேறுடிங்களில் நடந்தவை.    

❇️✅செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த குறும்புறை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி.

சித்தாமூர் போலீசார் விசாரணை

❇️✅மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

❇️✅கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. புவனகியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் உயிரிழந்தார்.

❇️✅கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது

❇️✅திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடி, மின்னலுடன்  பலத்த மழை; சுற்றுலாப்பயணிகள் தங்கும் அறைகளிலேயே முடங்கினர்.

❇️✅சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான புதுப்பாளையம், சின்ன கிருஷ்ணாபுரம், வடுகத்தம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட  பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்ததால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

❇️✅திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை 1 ஆம் தேதி சித்திரை விசுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகஅரசு விதித்த கட்டுப்பாட்டால் சித்திரை விசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம், அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் சாமி – அம்பாள் காட்சியளிப்பது ரத்து செய்யப்பட்டது. சித்திரை விசுத் வழிபாடு மற்றும் தாமிரவருணியில் புனித நீராட பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் பாபநாசத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாமிரவருணியில் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களின்றி பாபநாசம் வெறிச்சோடியது.

❇️✅தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் தியேட்டருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரத்தில் மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள் இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

❇️✅காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் துரையரசன்( 38 ). இவர் ரயில்வே சிக்னல் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

அதிகாலை எழுந்து பீரோ திறந்து கிடப்பதைப்பார்த்ததுரையரசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா டி எஸ் பி எஸ் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை

❇️✅விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன். இந்நிலையில் இவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

❇️✅நெல்லை வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்த செல்போன் கடைக்கு வந்த நடிகரை பார்க்க கூட்டம் கூடியதால் திறப்புவிழாவான இன்றே புதிய செல்போன் கடையை அடைத்து சீல் வைத்தது மாநகராட்சி நிர்வாகம்

Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browser
Disable in this text fieldRephraseRephrase current sentenceEdit in Ginger×

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *