*கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றி வருபவர்களை முன்களப் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் !*
*கொரோனா தொற்று பரவி உயிர் பலியாகும் சூழலில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் சேவையில் அரசுக்கு துணையாக சேவை செய்து வரும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், போன்றவர்களின் வரிசையில் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இடம்பெறுவதே இதன் சிறப்பாகும் !*
*மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி உட்பட அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும், உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிறப்பு பிரிவில் இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் !*
*இதுபோன்ற பல வகையான சலுகைகள் மக்களுக்காக பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கும் !*
*இரவு பகல் பாராமல், பாதுகாப்பு இன்றி போதிய வருமானம் கூட இல்லாமல் களப் பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி !*
*தோழமையுடன்*
*டி.எஸ்.ஆர்.சுபாஷ்*
*தமிழ்நாடு பத்திரிகையாளர்
Categories:
Uncategorized