தமிழக தேர்தலில் BJP ஷார்ஜா மகாதேவன்.
கடந்த சில வாரங்களாக கோயம்புத்தூர், தென் சென்னை, திருப்பூரில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை மகாதேவன் நேரடியாக மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதில் மகிழ்ச்சியடைந்த அவர், தனது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மகாதேவன் அவர் தனது அனுபவத்தைப் பற்றி விளக்கும்போது…”சாதாரண குடும்ப தலைவிகளின் விழிப்புணர்வையும் பாஜக குறித்த புரிதலையும் காணுகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தாய்மார்கள் எங்களிடம் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பாரத பிரதமர் யாரு என கேட்டு மோடி தாத்தா என குழந்தைகள் பதில் சொல்வதும் அண்ணாமலை போட்டோவை பார்த்து இது அண்ணாமலை மாமா எனச்சொல்வதும் திரு. MGR காலத்திற்கு பிறகு தமிழகம் மீண்டும் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு தயாராகி இருப்பதை நமக்கு செல்கிறது.
பாஜக தொண்டர்களான நம்மிடம் பேசுவதை பொதுமக்கள் மரியாதை என நினைப்பது நம் தலைவர் அண்ணாமலை அவர்கள் நமக்கு பெற்று தந்திருக்கிறார் என UAE பாஜக ஷார்ஜா மகாதேவன் பகிர்ந்து கொண்டார்.
By – Alexander George (Coimbatore Reporter)