வட கொரியாவின் எச்சரிக்கை
உலக நாடுகளின் அறிவுரைகளையும் எதிர்ப்பையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகின்றது வடகொரியா. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்த போதும் எத்தனை சோதனைகளை வடகொரியா நிறுத்தவே இல்லை. இந்நிலையில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் அண்மையில் தென்கொரியாவில் ஏவுகணை செலுத்தும் மையத்தில் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் சென்றிருந்தார். அப்பொழுது அவர் தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணை ஏவும் திட்டம் வைத்திருக்கின்றது என்றும் அவ்வாறு செய்தால் துல்லியமாகவும் வேகமாகவும் வடகொரியாவை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் முடியும் என எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘அணு ஆயுதம் கொண்ட ஒரு நாட்டின் மீது தாக்குதலை நடத்தலாம் என பகல் கனவு காண்பதை தென் கொரியா தவிர்கலாம் என கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் இருந்தாலும் அடுத்த சக்திவாய்ந்த தலைவராக அவரது சகோதரி இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nice