மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும், மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு,
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது, நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது, வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும், கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்,கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்,கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்.
கலையின் பெயராலே காமவலை வீசும் காசு வருமென்றால் மானம் விலை பேசும் நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்.
Categories:
Uncategorized