ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1,51,452 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 19,558, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 30 பேர் என 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 5,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,829 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
12 வயதிற்குட்பட்ட 625 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,17,405ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மேலும் 17,164 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,54,746 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *