2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
* கொரோனா பரவலை தடுப்பதற்காக GDP-யில் 13% ஒதுக்கீடு;
*2.87 லட்சம் கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்;
*நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த 1.41 லட்சம் கோடி ரூபாயில் புதிய திட்டம்;
*கொரோனா தடுப்பூசிக்காக 35,000 கோடி ரூபாய். தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்;
*நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7,400 திட்டங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்;
* 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா;
* மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை;
* தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த 1.03 லட்சம் கோடி ரூபாய்;
*நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ரூபாய்;
* தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள்;
* மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்;
*நகர்புற பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம்;
* உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் 20,000 கோடி ரூபாய்;
* சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்;
* பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவை;
* சுகாதாரத் துறைக்கு 2.23 லட்சம் கோடி ரூபாய் நிதி. அதன் கீழ் 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள்;
* கன்னியாகுமரி – கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள்;
* ரயில்வே திட்டங்களுக்காக 1.1 லட்சம் கோடி ரூபாய்;
* குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்;
* மின் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக 3 லட்சம் கோடி ரூபாய்;
* காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49%-லிருந்து 74%-ஆக அதிகரிப்பு;
* அரசு வங்கிகளுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய்;
* வேளாண் உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்;
*விவசாய நேரடி கொள்முதல் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்;
* விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த 16.5 லட்சம் கோடி ரூபாய்;
* நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயம்;
*தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா;
* தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி;
*டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 1,500 கோடி ரூபாய்;
* சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக 15,000 கோடி ரூபாய்;
* வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்த விலக்கு;
* வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பை தவிர்க்க நடவடிக்கை;
* வீட்டுக் கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
உள்ளிட்ட அம்சங்களை நிதியமைச்சர் இன்று அறிவித்தார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் புனேவில் உள்ள Serum Institute of India. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், Polio, Diphtheria உள்ளிட்ட 150 கோடிக்கும் அதிகமான WHO-வின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளை ,இதுவரை 170 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. உலகில் 65 சதவீத குழந்தைகள், Serum நிறுவனம் தயாரித்த ஏதேனும் ஒரு தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாக Serum நிறுவனத்துக்கு ஒரு கோடியே 10 லட்சம் கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை பெற ஆர்டர் கொடுத்துள்ளது. ஒரு dose-க்கு 210 ரூபாய் என்று விலையில் மத்திய அரசு வாங்குகிறது. தனியாருக்கு dose-க்கு ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் என்று அந்நிறுவன தலைவர் Adar Poonawala தெரிவித்துள்ளார். இப்போது கொரோனா தடுப்பூசி உற்பத்தி Serum நிறுவனத்தில் ஜரூராக நடந்து வருகிறது.
சென்னையில் ,ஒரு ஆண்டுக்கு, லாரி மூலம் சுமார் 18 லட்சம் தண்ணீர் delivery நடக்கிறது . தனியார் துறையும் ஈடுபட்டுள்ள இதன் மதிப்பு, ஆண்டுக்கு சுமார் 450 கோடி ரூபாய் என்று சொல்கிறார் GoWatr என்னும் , வாட்டர் டெலிவரி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைவர் srikanth jha. GoWatr இந்நிறுவனம் தரும் தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களின் வீட்டில் உள்ள தண்ணீர் டேங்க் காலியாகும் சமயத்துக்கு முன்னால், வாடிக்கையாளர்களுக்கு alert கொடுப்பதுடன், வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் borewell-ன் தகவலை கொடுக்கிறது. இப்போது , வாடிக்கையாளர்கள் தண்ணீருக்காக கொடுக்கும் விலையில் 70 சதவீதம் அதன் போக்குவரத்துக்கு மட்டும் செலவாவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக, ராணுவ விமானம் ஒன்றை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை Hindustan aeronautics Limited மத்திய அரசின் நிறுவனம் மட்டுமே செய்து வந்த இதை, முதன்முறையாக ,TASL என்றழைக்கப்படும் Tata advanced systems Limited நிறுவனம், இந்த புதிய ராணுவ விமானத்தை தயாரித்து இப்போது ஜெர்மனியில் சோதனை செய்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் விமானப் படையுடன் இணைக்கப்படும் என்று TASL அதன் தலைவர் Sukaran Singh தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வேலை தேடும் பலர், போலி நபர்களிடம் சிக்கி, பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. அது இப்போது 7.5% ஆகக் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இதை Gems and Jewellery Export Promotion Council தலைவர் Colin Shah வரவேற்றுள்ளார். 2020-ல் இந்தியாவின் தங்க இறக்குமதி 27.20% குறைந்து, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிக்கையில் மதுபானம், வீட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன் ஆகியவற்றுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பொருட்களின் விலை உயர உள்ளது. பருத்தி மற்றும் பட்டு(silk) மீதும் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், துணி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாமாயில் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வரி குறைக்கப்பட்டுள்ளதால், சோலார் விளக்குகள், தங்கம், வெள்ளி, ஆட்டோமொபைல் spare பாகங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.