வாழ்த்தவா…நன்றி சொல்லவா…
அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு வணக்கம்!
இன்று உங்களின் பிறந்தநாள் எல்லோரையும் போல் நானும் வாழ்த்தி விடலாம் என்றால் மனம் இடம் தரமாட்டேங்குது…ஆம்
மகன்…அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது
தம்பி…அண்ணனுக்கு வாழ்த்து சொல்வது
பணியாளன்… முதலாளிக்கு வாழ்த்து சொல்வது
சீடன்… குருவுக்கு வாழ்த்து சொல்வது
உதவி பெற்றவன்…உதவியவருக்கு வாழ்த்து சொல்லுவது தப்பல்ல…
இருந்தாலும் வாழ்த்துவதை விட இந்த வாய்புக்கு நன்றியை வெளி காட்டினால் அது இன்னும் சந்தோசம் வரும்…நாம இரண்டு பேருமே அப்படித்தான் இருக்கிறோம்.
உங்கள் மகள் திருமண அழைப்பிதழில் நீங்கள் மனதில் வைத்திருப்பவர்களில் சிலரின் படங்களை பதிவு செய்திருந்தீர்கள். அதில் என் படத்திற்கு முன்னால் மூன்று படங்களும் எனக்கு பின்னால் பல பிரபலங்கள். எனக்கு கூச்சமாக இருந்தது. அப்ப நீங்க சொன்னீஙக, அசோகன்ஜி உங்கள நாலாவதா போட்டதற்குகான காரணம்… என் மரணம் வரை மகிழ்ச்சியைத் தருமே…
பல வருசத்திற்கு முன் என் கவனக்குறைவால் ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல் காலத்தில் சக வெளியீட்டாளர் உங்களை அணுகி உங்கள் முன்னால் லட்ச ரூபாய வைத்து எங்களுக்கு எழுதுங்கள் என்ற போது நான் யாருக்கும் விலை போகும் ஆள் அல்ல… என் தந்தை அப்படி வளர்க்கவில்லை என கூறியதை கேள்வி பட்டேன் அதனால் உங்களுக்கு ஆயுளுக்கும் கடன் பட்டவன்…
எ நாவல் டைம் 65 ஆயிரம் பிரதிகள் விற்பனையில் இருந்த நிலையில் நண்பர்களின் நயவஞ்சகத்தால் நட்பை இழந்த போது என்னை ஒரு மகனாக எண்ணி…உங்களின் தந்தை உழைப்பின் சிகரம் ஶ்ரீமான் ராதாகிருஷ்ணன் என்னைத் தேடி வந்து பார்த்து…தம்பி நான் உங்க அப்பா மாதிரி பிரபாவுக்கும் என்ன சண்டை என கேட்க வரலை…ஏன் சண்டை என்று தான் கேட்கிறேன்.பிரபா எழுதறதும்…நீங்க வெளியிடரதும் உங்கள் இரண்டு பேர் விஷயம்…ஆனா இரண்டு பேரும் பேசாம இருக்கக்கூடாது இது தான் என் ஆசை என்ற அந்த குரல் ஒளிப்பதிவு செய்யாமலே ஒளிக்குது…
நாம் நண்பர்களுடன் மனோகரா சென்றது…
தஞ்சாவூர் சென்றது…
மகள் பாரதி பிறந்த போது குடும்பத்துடன் ஆலங்குடி வந்தது…
உங்க குலதெய்வ கோவிலுக்கு அழைத்து போனது என நிறைய நினைவுகள் இருக்கு.
இன்னும் ஒன்னு மட்டும் சொல்லாட்டி மனசு கொல்லும்…ஆம் அன்று ஒரு நாள் இரவு மணி 12 அகல அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் நடுவில் நாம் காரில் ஊர்ந்து போகும்போது டீக்கடை சிறுவன் அடநம்ம அசோகன் என சொல்ல…நான் தம்பி இதோ பிகேபி என சொல்ல… அவன் உங்க கதை எல்லாம் படிக்கறேன் என்றான்…
எத்தனையோ பக்க கதை எழுதற உங்க பக்கத்தில் இருப்பதால் தானே இந்த புகழ்…
என வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதால்…உங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தவா…நன்றி சொல்லவா.
நண்பர்கள் தினத்தில் நீங்கள பிறந்ததால் தான் உங்கள் நட்பு வட்டம் பெரிதாக உள்ளதா
என்றும் உங்களுடன்…
அதே லவ்வுடன்
ஜீயே
Categories:
Uncategorized