60 வருடங்களுக்கும் மேலாக…3, 4 தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கும் ..இந்து வெறுப்பு அரசியல்…. ஏற்படுத்தி இருக்கும் & ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகள் என்ன ? என்பதை கவனித்தால்…..
ஏன் இப்படியொரு அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து
பின்பலத்துடன் நடைபெற முடிகிறது ? என்பதும் எளிதாக புரிய வரும்.
இந்து என்பது நிறுவன மதம் அல்ல. 6 வகைகளை தாண்டி சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள் உட்பட அனைத்தும் இந்து எனும் ஆலமரத்தின் கிளைகள்.
இந்து வெறுப்பரசியலால் முக்கியமாக எதிர்க்கப்படுபவை …இந்து கடவுள்கள், பிராமணர்கள், சமஸ்கிருதம். நுணுக்கமாக மறைக்கப்படுபவை பழந்தமிழ் & பண்டைய தமிழ் இலக்கியங்கள்.
வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படும் குறிப்பான இந்து பெருந்தெய்வங்கள் … விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு .
இதில் விநாயகரை பொறுத்தவரையில்..விநாயக சதுர்த்தி ..இந்தியா முழுமைக்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு…இந்தியா முழுவதிலுமுள்ள பல கோடிக்கணக்கான மக்களை…மாநில எல்லைகளை / மொழி எல்லைகளை கடந்து இந்து என்னும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் உணர்வுப் பாலமாக மாறி விட்டிருக்கிறது. அதனால் இந்து வெறுப்பரசியலால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
முருகன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களுக்கு … மரபார்ந்த.. தொன்மையான.. பெரும் பெரும் கோவில்களும், ஆகப்பெரும் வருமானமும், பல கோடிக்கணக்கில் பக்தர்களும் உண்டு. இந்துக்களின் பெருவிருப்ப பெருந்தெய்வங்களான இவற்றிற்கு …அப் பெருவிருப்பதை தக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமான கோவில்கள், பொருளாதார வலிமை, தொடர் திருவிழாக்கள்.. அனைத்தும் இருப்பது…. இந்து வெறுப்பரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. மத மாற்றத்திற்கு தடையாக இருக்கிறது.
அதனால் …இந்து ஆன்மீகத்திற்கு அஸ்திவாரமான கடவுள்கள், கோவில்கள் மீது…ஒரு விலகலை இந்து வெறுப்பரசியல் உருவாக்குகிறது .
பிராமணர்கள் : மரபார்ந்த வழிபாட்டு முறைகள், வேதங்களை குறித்த அறிதல், தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட வாய்வழி- செவிவழி மத அறிதல், மத சடங்குகள், சம்பிரதாயங்கள், வாழ்வியல் சடங்குகள் ஆகிய தொன்மங்கள் அனைத்தையும்…50% பிராமணர்களாவது இன்றளவும் நீர்த்துப்போக விடாமல் இழுத்துப் பிடித்து உயிருடன் வைத்திருக்கிறார்கள். அதனாலேயே.. பிரம்மாண்டமான மரபார்ந்த பெருந்தெய்வங்களின் கோவில்களின் மத தொன்மத்திற்கு பலமாக இருப்பவர்கள்.
பழந்தமிழ் & சமஸ்கிருதம் : வேதங்கள், உபநிடதங்கள், மத குறிப்புகளின் மூல நூல்கள் பலவும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவை தவிரவும், ” பழந்தமிழ் & சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும்” தத்துவ நூல்கள், வாழ்வியல் நூல்கள், வானசாஸ்திர அறிவு, மருத்துவ அறிவு, போர் முறை அறிவு, கணித அறிவு, கட்டிடக் கலை அறிவு, வாழ்வியல் பண்பாட்டு நாகரீகம், நீர் மேலாண்மை, நிதி மேலாண்மை, அரசாட்சி முறைகள், யோக முறைகள், தந்திரங்கள், என்று எண்ணிலடங்கா பல துறை சார்ந்த அறிவு பொக்கிஷங்கள்… ஏராளம் உள்ளன. உலகின் பிற பாகங்கள்..மனித நாகரீகம் என்றால் என்ன என்று கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்… பாரத பகுதி…பல துறைகளிலும் பெரும் அறிவாற்றல் கொண்ட நாகரீக சமூகமாக முன்னேறி இருந்தது. இதற்கு சாட்சியாக இருப்பவை…இந்த நூல்கள்.
ஆக ..இந்து எனும் ஆலமரத்திற்கு வலு சேர்க்கும் பக்கபலம் சமஸ்கிருதம், பழந்தமிழ் ஆகிய தொன்மையான மொழிகள். ‘இன்றைய நிலையில்’ பெரும்பாலும் இவை இரண்டையும் குறித்து ஒருசேர அறிந்திருப்பவன்…மொத்தமுள்ள 3% -ல் அரை சதவிகித பிராமணன் இருந்தால் பெரிது !
பழந்தமிழ் நூல்களான தொன்மையான இலக்கியங்கள், தத்துவ நூல்கள், மத நூல்கள்…இந்து கடவுள்களை பேசுகின்றன /போற்றுகின்றன. பக்கங்கள் தோறும்….இந்து மத விழுமியங்கள் விரவிக் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள்… அதனாலேயே…தமிழர்களின் கல்வி பாடத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டு விட்டன. பழந் தமிழ் மொழியும்… ‘வெகு நுணுக்கமாக’…இந்துவெறுப்பு அரசியலால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.
விளைவு…இன்றைய தமிழர்கள் அறிந்திருப்பதும், பேசுவதும் சாரமற்ற, ஆழமற்ற, சாதாரண செந்தமிழ் வார்த்தைகளைக் கூட படித்து புரிந்து கொள்ளும் திறன் இல்லாத மேலோட்டமான தமிழ் ! இதில் எங்கிருந்து பண்டைய இலக்கியங்களை படித்து… அறிந்து… புரிந்து… கொள்வது ?
ஆக …தமிழ் மொழியின்..பழந்தமிழ் என்னும் தொன்மத்திற்கான அஸ்திவாரத்தையும் நுணுக்கமாக மக்களிடம் இருந்து விலக்கிவிட்டது. இந்துவெறுப்பு அரசியல்.
இதில் இருக்கும் முரணை கவனியுங்கள். சமஸ்கிருத மொழியை பிறரை படிக்க விடாமல் தடுத்தான் பிராமணன் என்கிற குற்றச்சாட்டை வைப்பவர்கள் தான் …’தடையற்ற இன்றைய காலத்தில்’… அம் மொழியை பிற மக்கள் படிக்கவேண்டாம் என்று வெறுப்பின் மூலம் தடுக்கவும் செய்கிறார்கள்.
இத்தகைய அரசியல் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகள் என்ன ?
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், சீனாவும் சம்ஸ்கிருத மொழியையும், பழந் தமிழையும்….தம் மக்களுக்கு , கல்லூரியில், பல்கலையில் வெகு முனைப்பாக..ஸ்காலர்ஷிப் முதற்கொண்டு வழங்கி..பெரிதும் உற்சாகப்படுத்தி கற்றுக் கொடுக்கின்றன.
அதன் வழியாக….பல காலமாக…மேல்குறிப்பிட்ட பழமையான நூல்களில் உள்ள நம்முடைய அறிவு செல்வம் திருடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பல கிறித்துவ தேவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. சீனாவின் புத்தமடங்களில் சம்ஸ்கிருதம் ஒலிக்கிறது & கற்றுக் கொடுக்கப்படுகிறது. பழந்தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மோகன் லாசரஸ் போன்றவர்கள் …பிராமணர்களை குறிவைத்து மதமாற்றுவதாக வெளிப்படையாகவே கூறுவதன் காரணமும் இதுவே.
அறிவு செல்வமும் திருடப்படுகிறது.
காத்து நிற்கும் தொன்மொழிகள் இரண்டும் நுணுக்கமாக விலக்கப்படுகின்றன.
இரண்டையும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கும் பிராமணனையும் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள்…அல்லது.. அதீத வெறுப்பை விதைத்து துரத்துகிறார்கள்.
பிற மக்களை …. அரசியல் ரீதியாக ‘சாதி குழுக்களாக’ வலுப்படுத்திவிட்டு…’நீ இந்து இல்லை’ என்று ஆன்மீகத்திலிருந்து விலக்குகிறார்கள்.
தங்களை பற்றி ஏதுமறியாத வேரற்ற சுயமற்ற மனிதர்களாக்கிய பின் மதம் மாற்றுவது மிகவும் எளிது.
இதனை பயன்படுத்தி உள்ளே நுழைகிறது மத மாற்ற அரசியல்.
SK Madurai
Categories:
Uncategorized