கேரளா குட்டநாடில் 70 ஆயிரம் தன்னார்வலர்கள் துாய்மை பணியால், ஒரே நாளில்16 கிராம் சுத்தமாயின!

சமீபத்திய கனமழையால், கடும் வெள்ளம் ஏற்பட்டு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியும், நிலச் சரிவால்
சாலைகள் துண்டிக்கப்பட்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட,  ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில், நேற்று ஒரே நாளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை
சேர்ந்த, 70 ஆயிரம் பேர் ஒன்று கூடி, துாய்மை பணியில் ஈடுபட்டனர். சாலைகள்,
நீர் போக்கு கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. தன்னார்வலர்கள் இணைந்து
மேற்கொண்ட இந்த பணியால், 16 கிராம பஞ்சாயத்துகள் சுத்தமாயின. இந்த பணியில்
பங்கேற்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பஸ், படகு,
தனியார் வாகனங்களில், ஆயிரக்கணக்கானோர், குட்டநாடு வந்தடைந்தனர்
Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *