சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் நிலம்
கையகப்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர்
அன்புமணி, நில உரிமையாளர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களின் வாதத்தை நீதிபதிகள்
கேட்டறிந்தனர். பின்னர், இந்த திட்டத்திற்காக சாலையோரம் வெட்டப்படும்
மரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று அவர்கள் அதிருப்தி
தெரிவித்தனர். மேலும், எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள
நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அங்கிருந்து
அப்புறப்படுத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர்
11ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories:
Uncategorized