வீட்டிலேயே இனிய பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த
கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது
செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது
செய்யப்பட்டார்.
இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல்
பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை
ஏற்படுத்தி விட்டது. இதுதொடர்பாக கோவை புதூரில் உள்ள நிஷ்டை மையத்தில்
பயிற்சி முகாம் நடப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
Healer Baskar arrested
ஆனால் கோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக
நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம்
உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது ஹீலர் பாஸ்கரை கோவை போலீஸார்
கைது செய்துள்ளனர்.
மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஹீலர்
பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்
Categories:
Uncategorized