பெங்களூரு வான்வெளியில், வானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இது
தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு
சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து
கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு வான்வெளியில் மோத இருந்தன. இரண்டு
விமானங்களும் 7.408 கி.மீ., தூரத்தில் இருந்தன. இது தொடர்பாக நவீன
தொழில்நுட்பமான டிசிஏஎஸ் அமைப்பு, எச்சரிக்கை விடுத்தது. இதனால், ஒரு
விமானம், 200 அடிக்கு கீழ் சென்றதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.
தற்போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது
Categories:
Uncategorized