மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள
கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது, கோட்டயம் மாவட்ட
எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அப்புகாரில் கடந்த, 2014ம்
ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ
முல்லக்கல் என்பவர் தன்னை கற்பழித்தார். தொடர்ந்து, 13 முறை அந்த கொடூர
செயல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோட்டயம் மாவட்ட போலீஸ் தரப்பு கூறுகையில், தான்
கற்பழிக்கப்பட்டது குறித்து சர்ச் நிர்வாகத்திடம் அந்த கன்னியாஸ்திரி
புகார் அளித்துள்ளார். ஆனால், சர்ச் நிர்வாகம் அதை பொருட்படுத்தாததால்,
போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
அதே
நேரத்தில், பணியிட மாற்றம் செய்ததால் தன் மீது அந்த கன்னியாஸ்திரி
அபாண்டமாக புகார் அளித்துள்ளார் என்று பிஷப் முல்லக்கல் தரப்பில், கோட்டயம்
மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆதாரங்கள்:
இப்பிரச்னை குறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய போலீசார் கற்பழிப்பு
நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளனர். கன்னியாஸ்திரியை பரிசோதனை செய்த
டாக்டரும், கற்பழிப்பு நடந்துள்ளதை உறுதி செய்துள்ளார். எனவே, இந்த வார
இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
எனினும், கடும் நெருக்கடி தரப்பட்டால் கடைசி நேரத்தில் கைது நடவடிக்கை
தவிர்க்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. குருவிலாங்காடு
விடுதிக்கு, 13 முறை பிஷப் வந்து தங்கி உள்ளார். அந்த நாட்களில் தான்
கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டுள்ளார். 13 முறை பிஷப் வந்து தங்கியதற்கு,
விடுதியில் உள்ள வருகை பதிவேட்டில் ஆதாரம் உள்ளது. அவரது வருகையை அந்த
விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்னியாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இதுதவிர கன்னியாஸ்திரி மீது பிஷப் அளித்த புகார் பொய்யானது என்பதையும்
போலீசார் உறுதி செய்துள்ளனர்.