தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து,
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர்
வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு
பிரச்னையை கருத்தில் கொண்டு, 23.5.18 பகல் 1 மணி முதல் 25.5.17 இரவு 8
மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ், தூத்துக்குடி
மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார்,
குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான்
ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் தடை உத்தரவு
பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து மற்றும் அதற்கு
மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொது கூட்டம்
நடத்துவதற்கும், சைக்கிள், இரு சக்கர மற்றும் நான்கு சக்க வாகனம் மூலம்
பேரணியாக, வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதிக் கொடிக்
கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும்,
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை
வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொது மக்களை
அழைத்து வருவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி
வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும்
வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி
செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *