இயற்கை அன்னையின் பரிசு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு
இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா
நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு
பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல
வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய்
வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில்
கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு
அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
எடுத்தவுடன் முழுமுயற்ச்சியாக மூன்று
வேளையும் இயற்கை உணவுக்கு வரவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. முதலில் ஒரு
வேளை இயற்கை உணவை நாம் பயன்படுத்திப் பார்த்து அதனால் கிடைக்கும் நன்மை
என்ன என்பதைப் அனுபவப்பூர்வமாக பார்த்தாலே நமக்கு இதில் இருக்கும்
அனைத்து உண்மைகளும் விளங்கும்.
பல நாடுகளில் மக்கள் இப்போது இயற்கை
மருத்துவத்தின் மூலம் பல நோயை குணப்படுத்தியுள்ளனர் நோய் வந்த பின்
குணப்படுத்துவதை விட நோய்வராமல் இருக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்
மற்றும் காய், கனிகளைப் பயன்படுத்தி என்ன நோய்களை
எல்லாம் குணப்படுத்தினார்கள்.
Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *