உயிரிழந்த ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின்| துணை அதிபர் முஹம்மது முக்பர் புதிய அதிபர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, விபத்தில் உயிரிழந்த அதிபர் மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளர்

ஈரானின் புதிய அதிபராக அந்நாட்டு துணை அதிபர் முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனி ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய அதிபரை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.

Categories: Ibrahim raisin death, Iran accident, Mohammad Mokhber
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *