துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நடந் த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
துபாய் :
29/03/2024 துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் சூப்பர் சோனிக் ஜியாவுதீன் அவர்களின் வழிக்காட்டுதலின் படி சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமை வகித்தார்.
துவக்கமாக முன்னாள் மாணவர் ஆலிம் முகம்மது ஜமாலுதீன் அவர்கள் இறைவசனங்களை ஓதினர். மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஃபஜ்ருதீன்
வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக துபாய் மாநகராட்சி கட்டமைப்பு பொறியியல் துறை வல்லுநர் ஃபைசுர் ரஹ்மான் தனது தலைமை உரையில் இஃப்தார் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். கல்லூரியில் படித்து வரும் வசதியற்ற மாணவ, மாணவியரின் உயர் கல்விக்கு தனது பங்காக ஒரு இலட்சம் ரூபாய் பணமாக அளிப்பதை உறுதி கூறி மேலும் இது போல அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
சூப்பர்சோனிக் குழும மேலாண்மை இயக்குனர் ஷாஹுல் ஹமீது, ஷார்ஜா இஸ்லாமிய விவகாரங்கள் துறை அதிகாரியும் முன்னாள் மாணவருமான அபுபக்கர் கண்ணான் முகமது, ஷார்ஜா குவைத் மருத்துவமனை மேலாண்மை அதிகாரி ஆசிக் அஹ்மத், மதுரை சேது தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் முகமது ஷெரிப், ,, இஸ்லாமிய இசை பாடகரும் நாகூர் இஸ்மாயீல் முஹம்மத் ஹனீஃபா மகனுமான நௌஷாத், அல் மஜ்ரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜாஹிர், பார்ம் பாஸ்கட் மேலாண்மை இயக்குனர் வலசை ஃபைசல், தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனர் உமர், அஜ்மான் – மருத்துவ கல்லூரி பேராசிரியர் முனைவர் நஷீருல்லாஹ், பிரபல RJ நாகா, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் சிறப்பு விருந்தினர்களான பொரியாளர் பைஜூர் ரஹ்மான் அவர்களுக்கும், இஸ்லாமிய விவகார துரை ஷார்ஜாவில் பணிபுரியும் அபூபக்கர் கண்ணான் அவர்களுக்கும், குவைத் மருத்துவமனை ஷார்ஜாவில் பணிபுரியும் ஆஷிக் அவர்களுக்கும் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சங்க துணை தலைவர் ஜாபர் சித்தீக், ஆலோசனை குழு மூத்த உறுப்பினர் ரஹ்மதுல்லா உள்ளிட்டோர் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். துணை பொதுச் செயலாளர் மன்னர் மன்னன் மற்றும் அனீஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் அதிகமான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க கூடிய முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த விழா சிறப்புடன் நடைபெற நிர்வாக குழு உறுப்பினர்கள் நவாசுதீன், முஹம்மது அனீஸ், சகுஹுபர் சாதிக், எமிரேட்ஸ் அலாவுதீன், அரபி நிசார் அகமது உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிறைவாக பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது