அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பிறகு, காசா பகுதிக்குள் நுழைவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு எரிபொருள் லாரிகளை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறியது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் சுமார் 140,000 லிட்டர் எரிபொருள் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அத்துடன் நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதில் ஐ.நா.வை ஆதரிப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
வெள்ளியன்று, காசாவின் தகவல்தொடர்புகளை வழங்கும் நிறுவனம், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா.வின் ஏஜென்சியான அன்ர்வா மூலம் எரிபொருளைப் பெற்ற பிறகு அதன் சேவைகள் திரும்பி வருவதாகக் கூறியது. இந்த எரிபொருள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இஸ்ரேல் மீது வாஷிங்டன் கணிசமான அழுத்தத்தை பிரயோகித்ததாக அமெரிக்க அதிகாரி கூறினார். இந்த ஒப்பந்தம் வாரங்களுக்கு முன்பு கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இஸ்ரேலால் தாமதப்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவிடம், தெற்கு காசாவில் எரிபொருள் தீர்ந்துவிடவில்லை என்றும், முதலில் பணயக்கைதிகள் பேரம் பேச முடியுமா என்று காத்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அன்ர்வாவின் தலைவர், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நிறுவனம் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டியிருக்கும் என்று வியாழக்கிழமை அவர் எச்சரித்தார். முன்னதாக, ஒரு இஸ்ரேலிய அதிகாரி, புதிய எரிபொருள் கொடுப்பனவு ஹமாஸை அடையவில்லை என்றால், ஐ.நா வழியாக தெற்கு காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ரஃபா கிராசிங் வழியாக கொண்டு வரப்படும் என்று கூறினார்.
காசா பகுதியின் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகள் பலமுறை கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) காசாவில் நோய் பரவுவதில் “கவலைக்குரிய போக்குகள்” பற்றி எச்சரித்துள்ளது. அங்கு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சு ஆகியவை சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை கடுமையாக சீர்குலைத்துள்ளன.