பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாக வியாழன் அன்று ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாக ரயில் சென்றபோது வெடிப்பு ஏற்பட்டது. ரயிலின் நான்காம் எண் பெட்டிக்குள் சிலிண்டர் வெடித்து சிதறியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிலிண்டர் ஒரு பயணியால் ரயிலின் கழிவறைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர்கள், ரயில் பாதையை சுற்றி வளைத்தனர். போலீசாரும் பயங்கரவாத எதிர்ப்புத் திணைக்கள அதிகாரிகளும் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் தொழுகைக்காகக் கூடியிருந்த 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.