சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 82வது வயதில் காலமானார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, அவர் உயிர்காக்கும் மருந்துகளில் இருப்பதாகவும், “விரிவான நிபுணர்கள் குழுவால்” ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேதாந்தா மருத்துவமனை கூறியது. உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ICU க்கு மாற்றப்பட்டார்.
நவம்பர் 22, 1939 இல் பிறந்த முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராவார், அவர் மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராக பணியாற்றினார் மற்றும் மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை மக்களவை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.